தேசிய ஊரக வேலை குறித்த குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம்
தேசிய ஊரக வேலை குறித்த குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக வைத்தீஸ்வரன் என்பவர் அரியலூர் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 8925811301 என்ற செல்போன் எண்ணிலும் மற்றும் ombudsman.ariyalur@gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், அந்த வேலை தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.