டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை

டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

Update: 2023-09-27 18:45 GMT

காரைக்குடி, 

டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

நகர்மன்ற கூட்டம்

காரைக்குடி நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் வீர முத்துகுமார் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- குணசேகரன், சூடாமணி நகரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நகரில் டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிரகாஷ், நகரில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் சரிவர பராமரிப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது. தெருநாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டாகியும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தெரியவில்லை. ஆக்கிரமிப்புகள் குறித்து நகர அமைப்பு அலுவலர் அலுவலகத்தில் புகார் செய்தாலும் கண்டு கொள்ள மறுக்கின்றனர். அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதுகுறித்து மன்றத்தில் பேசினால் சிலர் போனில் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் சித்திக், கண்ணன், மெய்யர், அமுதா, தேவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசினர்.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

நகர்மன்ற தலைவர் முத்துத்துரை பேசுகையில், ரூ.6 கோடியே 19 லட்சத்தில் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி, ரூ.3 கோடியில் பழைய பஸ் நிலையம் மேம்படுத்தப்படும் பணி நடைபெற உள்ளது. தினசரி மார்க்கெட் கழனிவாசல் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் ஏற்கனவே அங்கு மார்க்கெட் இருந்த பகுதியில் உழவர் சந்தையை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ெதருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சாலை, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுப்பட்டு வருகிறது. முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் சுகாதாரம் வளாகம் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்