ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை அன்று மின் நுகர்வோர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர்வு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் வேலூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கலந்துகொள்கிறார். மின்நுகர்வோர்கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.