சாத்தான்குளத்தில், வெள்ளிக்கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சாத்தான்குளத்தில், வெள்ளிக்கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

Update: 2022-10-19 18:45 GMT

தட்டார்மடம்:

திருச்செந்தூர் மின்கோட்ட பகுதியில் உள்ள மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) சாத்தான்குளம் சரஸ்வதி மஹாலில் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், நாசரேத், ஆறுமுகநேரி, உடன்குடி உப கோட்ட பகுதியைச் சேர்ந்த உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், கலந்து கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மின்சார பிரச்சினை, பழுதடைந்த மின்கம்பங்கள், புதிய மின் இணைப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேரில் தெரிவித்து தீர்வு காணலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்