புதுக்கோட்டையில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டையில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம் 12-ந் தேதி நடக்கிறது.
புதுக்கேபுதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 12-ந் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்குகிறார். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படை வீரர்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப்பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்குதல் வேண்டும். இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.