ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-10 16:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார மையத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது. ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி வரவேற்றார்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பணி உத்தரவு வழங்கப்படுவதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டினர்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் பாலாஜி, செந்தில்குமார், மலர்கொடி, வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன், தேவி, மண்டல துணை தாசில்தார்கள் தட்சிணாமூர்த்தி, சாரதா, வருவாய் ஆய்வாளர் நித்யா, கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்