போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 36 பேர் புகார் மனுக்களை அளித்தனர். அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கமிஷனர் கூறினார். மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா மற்றும் உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 19 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் நிலுவையில் இருந்த மனுக்களில், 76 மனுதாரர்கள் மீண்டும் வரவழைத்து போலீஸ் அதிகாரிகள் மூலம் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 76 மனுக்களும் முடிக்கப்பட்டது.