குறைதீர்க்கும் கூட்டம்
சீர்காழியில் போலீஸ் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
சீர்காழியில் போலீஸ் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். கூடுதல் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிசாமி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வரவேற்றார்.
இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 67 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம், 'பள்ளி நேரத்தில் தென்பாதி, கச்சேரி ரோடு, கொள்ளிடம் முக்கூட்டு ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
கோரிக்கை
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழிக்கு வரும் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் வழித்தடத்தை தவிர்த்து சீர்காழி நகரத்துக்குள் குறிப்பாக பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.