கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடும்பத்தினருடன் பெண் தர்ணா

கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த ஒரு பெண் குடும்பத்தினருடன் தான் தொழில் செய்யும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

Update: 2022-12-05 18:50 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மொத்தம் 346 மனுக்கள் பெறப்பட்டன.இதில், மாற்றுத்திறனாளிகளிடம் 53 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 27 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 19 ஆயிரத்து 596 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தர்ணா போராட்டம்

இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த தமிழரசி மற்றும் குடும்பத்தினர், தான் தொழில் செய்யும் இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து மனு அளித்துமம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து தமிழரசி மற்றும் குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்