குறைதீர்க்கும் முகாம்
வட்ட வழங்கல் பிரிவு சார்பாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவு சார்பாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், செல்போன் எண் சேர்த்தல், பிழை திருத்தங்கள் செய்ய மனு கொடுத்தனர். மொத்தம் பெறப்பட்ட 59 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது என வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி கூறினார்.