ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்- அண்ணாமலை

இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.;

Update: 2024-03-31 04:44 GMT

சென்னை,

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இயேசுபிரான், சக மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன்னையே தியாகம் செய்து, மீண்டும் உயிர்ந்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,தமிழக பா.ஜ.க. சார்பாக இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நம்பிக்கையை உருவாக்கும் இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்