முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து
தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆலங்குளம்:
முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.