சாலையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு

நெல்லை அருகே சாலையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த முதியவரை போலீசார் பாராட்டினர்.

Update: 2023-10-10 19:39 GMT

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவரது வீட்டில் உள்ள 3 பவுன் தங்க நகையை அவரது அண்ணன் அபிஷேகபட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்தார். அவர் நேற்று வங்கிக்கு சென்று நகையை திருப்பிக்கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, பல்கலைக்கழகம் அருகே சாலையில் நகையை தவற விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த சமுத்திரபாண்டி (63) என்பவர் அந்த நகையை எடுத்து நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா, பேட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து நகையின் உரிமையாளரான கண்ணனை வரவழைத்து அவரிடம் நகையை வழங்கினர். மேலும் சாலையில் கிடந்த நகையை எடுத்து பத்திரமாக ஒப்படைத்த சமுத்திர பாண்டியை பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்