காய்கறி கடைக்காரர் வீட்டை உடைத்து 10 பவுன் நகை- பணம் கொள்ளை

கோவில்பட்டியில் காய்கறி கடைக்காரர் வீட்டை உடைத்து 10 பவுன் நகை- பணத்தை மா்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2023-02-25 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் காய்கறி கடைக்காரர் வீட்டை உடைத்து 10 பவுன் நகை- பணத்தை மா்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

காய்கறி கடைக்காரர்

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, தென்றல் நகரில் குடியிருப்பவர் கணேசன் மகன் வெங்கடேஷ் (வயது 43). இவர் நகரசபை தினசரி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் தூத்துக்குடியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடியில் இருந்து வீட்டிற்கு வெங்கடேஷ் திரும்பி வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகை- பணம் கொள்ளை

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு வெங்கடேஷ் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்