பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
குற்றாலநாத சுவாமி கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சித்திர சபையில் நேற்று காலை நடராஜ பெருமானுக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.