செகந்திராபாத்-ராமநாதபுரம் விரைவு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு

முத்துப்பேட்டைக்கு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் விரைவு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரெயில் 1 ஆண்டுக்கு பிறகு நின்று சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Update: 2023-09-16 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டைக்கு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் விரைவு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரெயில் 1 ஆண்டுக்கு பிறகு நின்று சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 ஆண்டாக நிறுத்தப்படுவதில்லை

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரெயில் முத்துப்பேட்டையில் நின்று சென்று வந்தது.இதனால் கடந்த 1 ஆண்டாக இந்த ரெயில் முத்துப்பேட்டையில் நிறுத்தப்படுவதில்லை.முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பயணிகள் தொலைதூர பயணம் மேற்கொள்ள சிரமம் அடைந்து வந்தனர்.

இதை தொடர்ந்து செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ெரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்ல வேண்டும் என கடந்த ஒரு ஆண்டாக தென்னக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்

சிறப்பான வரவேற்பு

மேலும் அரசியல் பிரமுகர்களும், பல்வேறு இயக்கங்களும் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வந்தனர். இந்தநிலையில் செகந்திராபாத்-ராமநாதபுரம் ெரயில் முத்துப்பேட்டையில் நின்று செல்லும் என்று கடந்த வாரம் தென்னக ெரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 1 ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் முத்துப்பேட்டை ெரயில் நிலையத்திற்கு வந்த செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ெரயிலுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் ெரயில் என்ஜின் டிரைவர்களுக்கு, ெரயில் உபயோகிப்போர் சங்க நிர்வாகிகள் ஜெர்மன் அலி, சஜாத், சுல்தான் இபுராஹிம், வர்த்தக கழக தலைவர் கண்ணன், வர்த்தக சங்க செயலாளர் ராஜசேகர் உள்பட பல்வேறு அமைப்பினர் சால்வை அணிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்