மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு

வாணியம்பாடியில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நடைபெற்றது.

Update: 2023-03-31 17:26 GMT

வாணியம்பாடி தனியார் மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு 19 பெருமித செல்வன், பெருமித செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகிகளுக்கான பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து கல்லூரி கலையரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கவிஞர் நந்தலாலா சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு தமிழரின் அறிவியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கவிஞர் த.ஸ்டாலின் குணசேகரன் கல்லும் கதை சொல்லும் என்ற தலைப்பில் பேசினார்.

முன்னதாக மாபெரும் தமிழர் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை குறித்த காணொலி மாணவ, மாணவியர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மகளிர் திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் ராஜேஷ் குமார் ஜெயின், கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, கந்திலி அரசுக் கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன், தமிழ் இணைய கல்வி கழக பணியாளர்கள்,

கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்