செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு
மயிலாடுதுறையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை(வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம்(ஆகஸ்டு்) 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் லலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஜோதியை பெற்றுக் கொண்டனர்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
தொடர்ந்து மீண்டும் தொடர் ஓட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, மாவட்ட செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீரங்கனைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.