சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்
சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.;
சமயபுரம், மே.29-
அக்னி நட்சத்திரம் நேற்று முடிந்ததை யொட்டி சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு வெள்ளை மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.