உவரியில் கல்லறை திருவிழா

உவரியில் கல்லறை திருவிழா நடந்தது.

Update: 2023-04-07 19:13 GMT

திசையன்விளை:

உவரி அந்தரேயா ஆலயத்தில் கண்ணாடி பேழையில் வைத்து வழிபட்டு வந்த இயேசுநாதர் திருஉருவசிலையை 62 ஆண்டுகளுக்கு பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். புனித அந்தரேயா ஆலயத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை பங்குத்தந்தை டொமினிக் அருள்வளன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். சிறுவர்- சிறுமியர் மலர்தூவியபடி முன்செல்ல பெரியவர்கள் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அந்த ரேயா ஆலயத்தை அடைந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்