சாத்தூர்
சிவகாசி-சாத்தூர் சாலையில் கோணம்பட்டி விலக்கு அருகில் மூதாட்டி ஒருவர் 6 மாத காலமாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு சிவகாசி-சாத்தூர் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சின்னகாமன்பட்டி, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் தகவல் அறிந்து வந்து பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.