வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

வள்ளியூர் அருகே வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி இறந்தார்.

Update: 2022-05-30 19:53 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் மேரி (வயது 80). இவருடைய கணவர் பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மேரி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயமடைந்த மேரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்