தீயில் கருகி மூதாட்டி சாவு
விருதுநகரில் தீயில் கருகி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வரும் இவரது தாயார் கோமதி (82). சம்பவத்தன்று ராமசாமி தனது மனைவியுடன் வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது கோமதி சமையல் அறையில் உடலில் பலத்த தீக்காயங்களுடன் கிடந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கோமதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.