ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள ஓந்தியத்தை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 65), விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டம்மாள் இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.