பயனற்ற கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி மீட்பு

பயனற்ற கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.

Update: 2022-07-11 16:38 GMT

மயிலாடுதுறை கூறைநாடு காந்தி நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 70). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் பின் பகுதியை சுத்தம் செய்துள்ளார். அப்போது பயனற்ற கழிவுநீர் தொட்டி மீது ஏறி சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக அதற்குள் விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்க முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சென்று கழிவுநீர் தொட்டியில் விழுந்த நிர்மலாவை கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு நிர்மலா மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்