தங்கம் வென்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்்பட்டது.

Update: 2023-07-12 19:00 GMT

மயிலாடுதுறை;

சென்னை மெரினா கடற்கரையில் மாநில அளவிலான முதல்- அமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்ட போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் அணி, மாணவிகள் அணி 2 தங்கம் வென்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த இரண்டு அணிகளும் சென்னை அணியை எதிர்த்து போட்டியிட்டு இந்த வெற்றியை பதிவு செய்தனர். மாணவர் பிரிவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் கோகுலன், அரிஸ்குமார் ஆகியோரும், மாணவிகள் பிரிவில் 12-ம் வகுப்பு மாணவிகள் பாவனா, பிரியதர்ஷினி ஆகியோரும் இந்த சாதனையை படைத்தனர். தங்கம் வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய மாணவ-மாணவிகள், பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், நித்யா ஆகியோருக்கு மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் அப்துல்லாஷா, மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் பாபு, துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்