தாத்தா-பேரனுக்கு வெட்டு

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட தாத்தா-பேரனை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-09 19:00 GMT

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே உள்ள மகாதேவிபட்டினத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு உள்ளிக்கோட்டை வந்துவிட்டு மகாதேவப்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழியில் உள்ள எல்லையம்மன் கோவில் அருகே சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை பவுன்ராஜ் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்தியவர்கள் பவுன்ராஜிடம் தகராறு செய்தனர். இனால் பவுன்ராஜ் தனது பேரன் வசீகரனை (21) போனில் அழைத்தார். இதனையடுத்து அங்கு வந்த வசீகரன் மது அருந்து கொண்டிருந்த வாலிபர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகாதேவபட்டினம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன், செல்வம் உள்ளிட்ட 4 பேர் கத்தியால் பவுன்ராஜ் மற்றும் வசீகரனை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தாத்தா- பேரன் இருவரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து பவுன்ராஜ் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை(21) கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வம் உள்ளிட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்