சுதந்திர தினத்தையொட்டி கிராமசபை கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-16 21:15 GMT

  அலங்காநல்லூர், 

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராமசபை கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அச்சம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரவணன், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமராஜன், தங்கப்பாண்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீசுதா முருகன், துணை தலைவர் ஜெயகணேசன், ஊராட்சிசெயலர் முருகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். வடுகபட்டியில் ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமையிலும், துணைத்தலைவர் அன்பு முத்து, இளநிலை உதவியாளர் துர்கா முன்னிலையிலும் நடந்தது.

சின்னஇலந்தைகுளத்தில் ஊராட்சி தலைவர் முருகன் தலைமையிலும், கொண்டையம்பட்டியில் ஊராட்சி தலைவர் மலைச்சாமி தலைமையிலும், முடுவார்பட்டியில் ஊராட்சி தலைவர் ஜெயமணி அசோகன் தலைமையிலும், பாரைப்பட்டியில் ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி முத்தையன் தலைமையிலும், கீழசின்னனம்பட்டியில் ஊராட்சி தலைவர் ரமேசன் செல்வராஜ் தலைமையிலும், அய்யூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அபு தாகீர் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட நிலையூர் 2-வது பிட் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் யோகேஸ்வரி செல்வம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரியாகண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிசெயலர் ஜெகதீசன் வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.

கொட்டாம்பட்டி மந்தை திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில், அனைத்து துறை அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வலைச்சேரிபட்டி, பள்ளபட்டி, பாண்டாங்குடி, கருங்காலக்குடி, தும்பைபட்டி, வஞ்சிநகரம் உள்பட 27 கிராம ஊராட்சிகளில் கூட்டம் நடந்தது.

சோழவந்தான், திருமங்கலம்

சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளத்தில் ஊராட்சி தலைவர் பூங்கொடிபாண்டி தலைமையிலும், விக்கிரமங்கலத்தில் ஊராட்சி தலைவர் கலியுகநாதன் தலைமையிலும், பானா மூப்பன்பட்டியில் ஊராட்சி தலைவர் மகாராஜன் தலைமையிலும், காடுபட்டியில் ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமையிலும், முள்ளிப்பள்ளத்தில் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமையிலும், இரும்பாடியில் ஊராட்சி தலைவர் ஈஸ்வரிபண்ணைசெல்வம் தலைமையிலும், நாச்சிகுளத்தில் ஊராட்சி தலைவர் சுகுமாரன் தலைமையிலும், கருப்பட்டியில் ஊராட்சி தலைவர் அம்பிகா தலைமையிலும், மேலக்காலில் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையிலும், மேலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமையிலும், கரிசல்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டூர் குருவ லட்சுமி என்ற சின்ன வெள்ளை தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக பொதுமக்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்