குடியரசு தினத்தையொட்டி 497 ஊராட்சிகளில் 26-ந் தேதி கிராம சபை கூட்டம்
குடியரசு தினத்தையொட்டி 497 ஊராட்சிகளில் 26-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
கிராம சபை கூட்டம்
குடியரசு தினமான 26-ந் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு நடக்கிறது.
வறுமை குறைப்புத்திட்டம்
ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், மக்கள் நிலை ஆய்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத்திட்டம் மற்றும் இதரப்பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பிக்குமாறு கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.