அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

Update: 2022-09-30 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை)காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞரின் வீடு வழங்கும் திட்ட மறு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் மற்றும் இதர பொருட்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்