54 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி சிவகாசி யூனியனில் உள்ள 54 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-10-03 02:04 IST

ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியாண்டி கோவில் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துமாரி முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து செயலர் நாகராஜன் வரவேற்றார்.

இதில் தாசில்தார் வடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யூனியன் கவுன்சிலர் கவிதாபிரவீன், திலிபன் மஞ்சுநாத், பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தினமும் 7 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய நிலையில் 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து செயலர் அருள்ராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி அரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜம்மாள், விஜயலட்சுமி, மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் விஸ்வநத்தம் பஞ்சாயத்தில் நடை பெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் சக்தி வேல்நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சின்னத்தம்பி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செல்வம் செய்திருந்தார். இதேபோல் 54 பஞ்சாயத்துக்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்