306 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி 306 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2023-09-27 23:30 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியையொட்டி காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், மழைநீர் சேமிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், காசநோய் இல்லாத ஊராட்சியாக அறிவித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்