157 கிராம ஊராட்சிகளிலும் நாளைமறுநாள் கிராமசபை கூட்டம்: கலெக்டர் தகவல்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் நாளைமறுநாள் கிராமசபை கூட்டம் நடக்கிறது.

Update: 2023-01-23 18:30 GMT

கிராமசபை கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம்.

கலந்து கொள்ள வேண்டும்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம குடிநீர் வினியோக செயல்திட்டம், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்பட உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்