மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

வடமதுரை அருகே தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.;

Update:2023-02-18 00:30 IST

வடமதுரை அருகே உள்ள புதுகலராம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 11-ந்தேதி தனது ஊரிலிருந்து அய்யலூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லபட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பு கம்பி மீது மோதியது. இதில் கீழே விழுந்த கார்த்தி படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன்பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி நேற்று பலியானார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்