தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-05-22 12:08 GMT

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் அருளரசு தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, முதன்மை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கலைவாசன், பேராசிரியர்கள் ராஹீலா பிலால், பிரவீன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கில பேராசிரியர் சுப்பிரமணி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி முரளி கே.ராஜகோபாலன் கலந்து கொண்டு 286 இளங்கலை, 57 முதுகலை என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது என்ஜினீயரிங் பட்டதாரிகளான நீங்கள் எந்த வேலைக்கு சென்றாலும் கற்றல் மற்றும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். விடா முயற்சியால் பல்வேறு சாதனைகள் படைக்கலாம். தங்களின் பலம், பலவீனம் குறித்த சுய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்றார்.

விழாவில், பேராசிரியர்கள் முரளிதர், முருகவேல், பியூலாசுகந்தி மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்