பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
திருப்பத்தூர்
பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நாட்டறம்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் 16-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள ஐன்ஸ்டீன் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏலகிரி வி.செல்வம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.பாஸ்கர் வரவேற்றார்,
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் உதவி கலெக்டர் ஆர்.வில்சன் ராஜசேகர் கலந்து கொண்டு 714 மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை, முதுகலை பொறியியல் பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''பொறியியல் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் இலக்கினை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். காக்கை போல் அல்லாமல் கழுகு போல் உயர பறந்து வெற்றியை அடைய வேண்டும். சமூக பொறுப்புணர்வுடன் நாட்டையும் மற்றும் வீட்டையும் வழி நடத்தி மிகப்பெரிய வெற்றிைய பெற வேண்டும்'' என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணைச் செயலாளர்கள் பி.கனகராஜ், வி.ஜெய்சங்கர், உறுப்பினர்கள் டி.டி.சி.சங்கர், கே.லட்சுமணன், சி.சண்முகம், ஆர்.பழனிச்சாமி, பி.கேத்தரின் ஜார்ஜினா, லியோ, தாசில்தார் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.