பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2022-11-29 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். .மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், முருகன், திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜவகர் வரவேற்று பேசினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களை கற்றல் பணிகளை தவிர்த்து மாற்றுப்பணிகளுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும்.. அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்