தூக்குப்போட்டு பட்டதாரி தற்கொலை
ஒரத்தநாடு அருகே தூக்குப்போட்டு பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஒரத்தநாடு;
ஒரத்தநாட்டை அடுத்துள்ள மண்டலகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது42). பட்டதாரியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி வெளியூரில் தங்கி பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜேஷ்கண்ணன் நேற்று மதியம் தனது வீட்டில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.