பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-06-18 19:34 GMT

வல்லம்:

தஞ்சை அருகே திருமணமான 5 மாதத்தில்‌ பட்டதாரி பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டதாரி பெண்

தஞ்சையை அடுத்துள்ள கண்டிதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகள் சூர்யா(வயது 27). பட்டதாரியான இவருக்கும் தஞ்சை அருகே உள்ள சுந்தராம்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நிவின் என்கிற சிவசுப்பிரமணியனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சூர்யா தனது கணவருடன் சுந்தராம்பட்டியில் வசித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது கணவர் வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்; போலீசில் தந்தை புகார்

இதுகுறித்து சூர்யாவின் தந்தை சிவசங்கர், வல்லம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறி உள்ளார். அந்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திருமணமாகி 5 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இது குறித்து தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை நடத்தி வருகிறார்.

சோகம்

திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்‌போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்