பட்டதாரி பெண் திடீர் மாயம்

சின்னசேலம் அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்

Update: 2023-01-25 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே எரவார் கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகள் கோமதி(வயது 23). பட்டதாரியான இவா் வீ்ட்டு வேலைகளை கவனித்து வந்தார். சம்பவத்தன்று டிரைவரான பெரியசாமி வெளியூர் சென்றிருந்ததால் இரவு கோமதி அவரது தாய் ராஜாமணியுடன் வீட்டில் படுத்து உறங்கினார். பின்னர் மறுநாள் காலையில் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக சென்ற கோமதி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி பல்வேறு இடங்களில் மகளை தேடிபார்த்தும் அவரை காணவில்லை. பின்னர் இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதியை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்