அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம்

தூத்துக்குடி அருகே சித்தர் பீடத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

Update: 2023-02-21 18:45 GMT

தூத்துக்குடி அருகே சித்தர் பீடத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

வித்யா விருத்தி ஹோமம்

தூத்துக்குடி அருகே உள்ள மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிட ஆண்டுதோறும் சரசுவதி தேவிக்கு வித்யா விருத்தி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கல்வி ஞானம், நினைவாற்றல் அதிகரித்து அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவும், போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் வேண்டி வித்யா விருத்தி ஹோமம் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.

மாணவர்களுக்கு பேனா

நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், 11மணிக்கு சரசுவதிதேவிக்கு மகா யாக சிறப்பு வழிபாடும், மதியம் 12.30 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், அதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான சிறப்புயாக வழிபாட்டில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு வித்யா விருத்தி ஹோமத்தில் வைத்து வழிபட்ட பேனாக்களை சீனிவாச சித்தர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்