தாராபுரம்
புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் தாராபுரம் அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.