தீக்குளித்த அரசு பள்ளி ஆசிரியர் சாவு

அருப்புக்கோட்டை அருகே கழிவுநீர் தொட்டி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த அரசு பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-07-14 19:43 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே கழிவுநீர் தொட்டி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த அரசு பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆசிரியர் தீக்குளிப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 30 அடி வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 40). நரிக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டின் அருகே ராஜாமணி என்பவர் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கழிவுநீர் தொட்டி அமைப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராஜாமணி கழிவுநீர் தொட்டிக்கு குழி தோண்ட முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அழகர்சாமி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த அழகர்சாமியை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்