அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணி நீக்கம்
சத்துணவுத்திட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்ட அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்்டர் லலிதா உத்தரவிட்டு உள்ளார்.
சத்துணவுத்திட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்ட அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்்டர் லலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இந்த பள்ளியின் சத்துணவு திட்டத்துக்கு அமைப்பாளராக ராமதேவன் பணியாற்றி வந்தார். இந்த பள்ளி சத்துணவு கூடத்தில் கடந்த 6-ந்தேதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது சத்துணவு மையத்தில் பூச்சிபிடித்து இருந்த துவரம்பருப்பை மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க பயன்படுத்தியது தெரியவந்தது.
தற்காலிக பணிநீக்கம்
மேலும் ஆகஸ்டு மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளுவதுடன் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி சுத்தப்படுத்தி வைக்க அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரால் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.இருப்பினும் அறிவுரையை பின்பற்றாமல் சுத்தமில்லாத துவரம் பருப்பை பயன்படுத்தி சத்துணவு விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்ட சத்துணவு அமைப்பாளர் ராமதேவன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.