கோட்டூரில் ரோபோ தயாரிப்பில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்

கோட்டூரில் ரோபோ தயாரிப்பில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்

Update: 2022-09-18 19:00 GMT

ஆனைமலை

தமிழக அரசின் மாணவ -மாணவிகளின் தனித்திறன் மேம்பாட்டுக்காக 'நான் முதல்வன்' என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் வாரத்திற்கு 4 வகுப்புகள் தனித்திறன் மேம்பாட்டுக்காக நடத்தப்பட அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஆனைமலை அடுத்துள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 650-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அறக்கட்டளை வாயிலாக மாணவிகளின் தனித்திறமை மேம்பாட்டுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரொமான்டிக் கணினி பயன்பாடு மற்றும் தையல் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இணையதளம் வாயிலாக மாணவிகள் தாங்களாகவே கணினி பயிற்சிகள் பெற்று கோடிங் செய்து ரோபோ தயாரிப்பிலும் அசத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தனி திறன் மேம்பாட்டு மைய பொறுப்பாளராகவும் விலங்கியல் ஆசிரியரான சிவக்குமார் கூறியதாவது:- தமிழக அரசால் மாணவ- மாணவிகளின் தனித்திறன் மேம்பாட்டுக்காக வாரத்திற்கு 4 வகுப்புகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 தையல் மிஷின்கள் அதற்கு தேவையான துணி, மடிக்கணினி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயிற்சிகள் மாணவர்களை எதிர்காலங்களில் அவர்களுக்கு பெரிதும் உதவும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்