அரசு பள்ளிக்கு கல்விச்சீர்
முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளியை மேம்படுத்தும் நோக்கில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான சேர், மின்விசிறி, ஒலிபெருக்கி, குடம், நோட், புத்தகம், சிலேட், பக்கெட் உள்ளிட்ட ஆசிரியர், மாணவர்களுக்கு தேவையான பல்வேறு வகையான ரூ.1 லட்சம் மதிப்பிலான உபயோக பொருட்களை பெற்றோர்கள் மேளதாள இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிக்கு வழங்கினார்கள்.அதன் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கிராமிய பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செங்கை விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.