அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைமை ஆசிரியை சந்திரா தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியை சம்மனசுமேரி முன்னிலை வகித்தார். பள்ளி உதவி ஆசிரியை ரமா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ஜோதி கலந்துகொண்டு விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாஜ்ஜுதீன், பெரிய வளையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை லிங்கமநாயக்கன்பட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.