அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காரைக்குடியில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-01-02 20:21 GMT

காரைக்குடி,

காரைக்குடி மு.வி.அரசு மேல்நிலைப்பள்ளியில் 1986-87-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர் சரவணன் தலைமை தாங்கினார். தற்போதைய பள்ளி உதவி தலைமையாசிரியர் பாண்டிகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் 51 மாணவர்கள் சந்தித்து தங்களது பள்ளிக்கால நிகழ்ச்சிகளை நினைவுப்படுத்தி உரையாடி மகிழ்ந்தனர். மேலும் தனக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர் சீனிவாசன் தேசிய கொடியேற்றி பள்ளியில் இருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக முன்னாள் மாணவர்கள் ராமசாமி, ராஜீவ்ராம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியில் உள்ள விழா மேடையை மேம்படுத்துதல், குடிநீர் குழாய் மற்றும் குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் நேற்று சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர்களாகவும், அரசியல் பிரமுகர்களாகவும், அரசு பணிகளிலும் இருந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்