'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் ‘லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Update: 2023-10-11 20:44 GMT

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் 'லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற 19-ந் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி வருகிற 19-ந் தேதி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழக அரசுக்கு படக்குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

'லியோ' படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் சார்பில் ஆயுத பூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு படத்தை 19-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள். அதற்காக 19-ந் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்த நிலையில், படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்பு காட்சிகள் திரையிடலாம். அதேவேளை ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்