அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Update: 2023-03-28 18:45 GMT

கோவை

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது:-

கடந்த 20-ந் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 21-ந் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீண்டும் தமிழக முழுவதும் இன்று (நேற்று) அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

காலமுறை ஊதியம்

ஆகவே தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல் இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும்உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றோம் என்றனர்.

இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று அரசு அலுவலகங்களில் உள்ள பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்